உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெறும் மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்.!
கல்வி அமைச்சு உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசு வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.இதன் மூலம், க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அதிக இசட் புள்ளிகள் பெற்ற மாணவர்கள், மதிப்புமிக்க வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தங்கள் விருப்பப்படி பட்டப்படிப்புகளை தொடர வாய்ப்பு பெறுவார்கள்.
இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 200 புலமைப்பரிசுகள் வழங்கப்படவுள்ளன என்றும், அதன் முதல் கட்டத்தில் 32 மாணவர்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என கல்வி அமைச்சின் பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.