உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சிறந்த அரச சேவையாளர்களை இழக்க முயற்சிக்கிறது அரசு – சந்திரிகா !

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போதைய அரசாங்கம் தராதரமும் குறைந்த அனுபவமும் கொண்ட கட்சி உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தி, சிறந்த அரச சேவையாளர்களை இழக்க வழிவகுக்கிறது என்று தெளிவாகக் குற்றச்சாட்டு எழுப்பினார்.தன் ‘பேஸ்புக்’ கணக்கில் அவர் வெளியிட்டுள்ள கருத்தில், “நீதி பாதிப்பை உருவாக்குமேயானால்” என்ற தலைப்பில் vox civis இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையின் முக்கிய அம்சங்களை பகிர்ந்துள்ளார்.

இவர் கூறியதாவது, இலங்கையின் அடிப்படை கட்டமைப்பில் உள்ள ஆழமான பிரச்சினைகளை இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது என்றும், அவர் முழுமையாக அதில் உடன்படுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி தனது செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுடன் கடந்த காலங்களில் பணியாற்றிய அனுபவத்தை நினைவுகூர்ந்தும், சிறந்த தரமான அரச சேவையாளர்கள் இல்லாத அரசாங்கம் இயங்க முடியாது என்றும், தற்போதைய அரசின் நடவடிக்கைகள் அரசியல் ஆளுமையை இழக்க வைப்பதாகவும் தெரிவித்தார்.

அவரின் கருத்தில், அரசியல் ஆளுமை மக்களிடையே உயர்வாக இருந்த போது நாடு நல்ல நிலையில் இருந்தாலும், தற்போதைய நிலைமை நாட்டை இரு தசாப்த கால இருளாட்சிக்குள் தள்ளியுள்ளது. தற்போதைய அரசாட்சி மாற்றமடையாவிட்டால், நிலைமை “கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிய கதையாகிவிடும்” என்றும் அவர் எச்சரித்தார்.முன்னாள் ஜனாதிபதி மக்கள் கேள்விகளை முன்வைத்து, ஜனநாயக பண்பாட்டில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தீர்வுகளைத் தேட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

55 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

95 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

85 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

35 0 0