உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாட்டை தவிர்க்க மாதாந்த மீளாய்வு கூட்டம் அவசியம் – சுகாதார பிரதி அமைச்சர்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

வைத்தியசாலைகளில் தொடர்ச்சியான மருந்து விநியோகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு வைத்தியசாலையிலும் மாதத்திற்கு ஒருமுறை மருந்துகள் தொடர்பான மீளாய்வு கூட்டங்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலையில் மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
மருந்துகளில் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்பே அவற்றை இனங்கண்டு உரிய தீர்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார். மேலும், பிராந்திய கொள்வனவுகள் மூலம் வைத்தியசாலைகளில் தொடர்ச்சியான மருந்து விநியோகத்தை பேணுவதற்கும், அதனை மதிப்பீடு செய்யும் மீளாய்வு கூட்டங்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவித்தார்.

எல்லா நேரங்களிலும் தேவையான மருந்து இருப்பை பேணிக்கொள்ள முடிந்தால், மருந்து பற்றாக்குறை காரணமாக உருவாகும் சிக்கல்களுக்கு சாதகமான தீர்வாக அமையும் எனவும் அவர் கூறினார்.மருத்துவ விநியோகப் பிரிவின் மருந்து விநியோக வலையமைப்பை மேலும் சீரமைக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் சுகாதார பிரதி அமைச்சர் அங்கு தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

46 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

78 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

35 0 0