உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வடமராட்சி கிழக்கில் பனைமரங்கள் சட்டவிரோதமாக அழிப்பு – மக்கள் கடும் குற்றச்சாட்டு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் பனைமரங்கள் அதிகளவில் சட்டவிரோதமாக அழிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.யுத்த காலத்தில், குறிப்பாக 2009ஆம் ஆண்டு வரை, இலட்சக்கணக்கான பனைமரங்கள் அழிக்கப்பட்டதாகவும், யுத்தம் முடிவுக்கு பின்னரும் பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி பனைமரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.காணி பாதுகாப்பு மற்றும் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி பனைமரங்கள் அகற்றப்படுகின்றன எனவும், வடமராட்சி கிழக்கிலிருந்து சட்டவிரோதமாக வெட்டப்பட்ட பனைகள் ஏனைய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.


தொடர்ச்சியாக இடம்பெறும் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாதமை குறித்து மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.பனைமரங்கள் கைதொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட பல குடும்பங்களின் வாழ்வாதாரத்துடன் நேரடியாக தொடர்புடையவை எனவும், அதிகளவு பனை அழிப்பு காரணமாக அவர்களின் பொருளாதார நிலை பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதனால், பனைமரங்களை பாதுகாக்கும் வகையில் பனை அபிவிருத்தி சபையும், பொலிஸாரும் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

46 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

78 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

35 0 0