உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இலங்கையில் சிறுவர் புற்றுநோய் அதிகரிப்பு: இலவச மருந்துகள் வழங்க ஒப்பந்தம்!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

இலங்கையில் ஓராண்டு காலப்பகுதிக்குள் மொத்தம் 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் சூரஜ் பெரேரா இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,

சிறுவர் புற்றுநோய்க்கான சிகிச்சைக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய மருந்துகளையும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தடையின்றி வழங்குவதற்காக சுகாதார அமைச்சருடன் ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தின் கீழ், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்குத் தேவையான அனைத்து மருந்துகளும் இலவசமாக வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது, சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சைகளைப் பெறவும், சிகிச்சையின் முடிவுகளைச் சாதகமாக மாற்றவும் மிக முக்கியமான காரணியாக அமைகிறது என்று சுட்டிக்காட்டினார்.

பிள்ளைகளிடம் தொடர்ச்சியான அல்லது வழக்கத்திற்கு மாறான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டுமெனவும் காலதாமதம் இன்றி சிகிச்சையைத் தொடங்குவது குழந்தைகளின் உயிரைக் காக்க உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.

சிறுவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் எதிர்கொள்ளும் உணர்ச்சி ரீதியான மற்றும் நிதி ரீதியான சவால்களைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இந்த மூன்று ஆண்டுத் திட்டமானது நாட்டின் சிறுவர் புற்றுநோய் பராமரிப்புச் சேவைகளை வலுப்படுத்தும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இது ஒரு பெரிய ஆறுதலாக அமையும் என்றும் சுகாதார அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

46 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

78 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0