வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து; ஐவர் வைத்தியசாலையில் அனுமதி.!
கண்டியில் அக்குறணை, தொடங்கொல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை 04.30 மணியளவில் ஏற்பட்ட தீ பரவலில் 5 பேர் காயமடைந்துள்ளதாக அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ பரவலின் போது வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.