உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

வேலை கிடைக்காத விரக்தியில்- இளைஞர் ஒருவர் தற்கொலை முயற்சி.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
55 பார்வைகள்

வேலை கிடைக்காத விரக்தியில் மகன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அந்த விஷத்தை பறித்து அருந்திய தாய் உயிரிழந்த நிலையில் மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டா பகுதியைச் சேர்ந்தவர் நீரஜ் ஜெயின் (54). இவருக்கு சோனாலி ஜெயின் (52) என்ற மனைவியும், கிஷிதிஜி ஜெயின் (29) என்ற மகனும் உள்ளனர். நீரஜ் ஜெயின் அண்ணாநகரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.மேலும் செம்பியத்தில் டிராக்டர் நிறுவனத்தில் துணைத் தலைவராகவும் உள்ளார். இவரது மகன் கிஷிதிஜி ஜெயின் இங்கிலாந்தில் எம்பிஏ படித்துவிட்டு வேலை தேடி வந்தாக கூறப்படுகிறது. அங்கே வேலை கிடைக்காததால் கடந்த டிசம்பரில் சென்னை திரும்பி இங்கு வேலை தேடியுள்ளார்.

சென்னையிலும் வேலை கிடைக்காததால் விரக்தியடைந்துள்ளார். மேலும் இதுதொடர்பாக தாயாரிடம் கூறி வேதனைப்பட்டுள்ளார். அவருக்கு தாய் ஆறுதல் கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கிஷிதிஜி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தாய், அந்த விஷத்தை பறித்து அருந்தியுள்ளார். பின்னர் இருவரும் அங்கேயே மயங்கினர். சிறிது நேரத்துக்குப் பிறகு அங்கு வந்த நீரஜ் ஜெயின் மனைவி மற்றும் மகனை மீட்டு அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.அங்கு சிகிச்சை பலனின்றி சோனாலி உயிரிழந்தார். மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அண்ணா நகர் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

40 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

43 0 0