உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மலையக மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
23 பார்வைகள்

‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தமானது இலங்கையில் கட்டமைப்பு ரீதியான இடைவெளிகளையும், சமத்துவமின்மையையும் வெளிப்படுத்தியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ட்ரூ – பிரான்சே தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் குறித்த மதிப்பீடுகளை விரைந்து முன்னெடுப்பதோடு, இதில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட ‘டித்வா’ சூறாவளியால் மலையகப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த வார இறுதியில் பதுளை மாவட்டத்துக்கு விஜயம் செய்து களநிலைவரங்களைப் பார்வையிட்ட பின்னர் வெளியிட்டுள்ள காணொளியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-
‘டித்வா’ சூறாவளி இலங்கையைத் தாக்கி இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இந்தப் பேரனர்த்தத்தின் போது அரச அதிகாரிகள் ஆற்றிய அளப்பரிய சேவையையும், இலங்கை மக்கள் வெளிப்படுத்திய ஒற்றுமையையும் நாம் பாராட்டுகின்றோம். அத்துடன், பாதிப்புகளைக் குறைப்பதற்காகச் சர்வதேச சமூகமும் உடனடியாக உதவிகளை வழங்க முன்வந்தது.

எது எவ்வாறெனினும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்னும் பல தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளன. குறிப்பாக, பாதுகாப்பான குடியிருப்பு வசதிகள், தூய்மையான குடிதண்ணீர் மற்றும் வாழ்வாதார உறுதிப்பாடு போன்ற விடயங்களில் நடுத்தர மற்றும் நீண்டகால அடிப்படையிலான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்.

இந்த அனர்த்தம் சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. எனவே, தேவைகள் குறித்த மதிப்பீட்டின் போது மலையக மக்களுக்கு விசேட முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

45 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

78 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0