உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இலங்கையின் இராஜதந்திர வெற்றி; இந்தியாவுடன் மோத பாகிஸ்தான் சம்மதம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
22 பார்வைகள்

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பஹீம் உல் அஜீஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் பலனாக, எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது.

இலங்கையிலான தனது பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், பாகிஸ்தான் தூதுவர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து விடைபெற்றார். இதன்போதே இந்த முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்பதில்லை என்று பாகிஸ்தான் முன்னதாக எடுத்திருந்த முடிவை தற்போது கைவிட்டுள்ளது. இலங்கையுடன் முன்னெடுக்கப்பட்ட மூன்று நாள் தீவிர இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளின் பலனாக, கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்த இராஜதந்திரச் சிக்கலைத் தீர்ப்பதில் இலங்கை ஆற்றிய ஆக்கபூர்வமான மத்தியஸ்தப் பணிகளைத் தூதுவர் வெகுவாகப் பாராட்டினார். குறிப்பாக, உலகக் கிண்ணப் போட்டிகள் தொடர்பான நிச்சயமற்ற தன்மைகளைத் தீர்க்க அமைச்சர் விஜித ஹேரத் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளுக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

அமைச்சரின் இராஜதந்திரக் கோரிக்கைகளுக்கு பாகிஸ்தான் தூதுவர் வழங்கிய உடனடி மற்றும் நேர்மறையான பதிலுக்காக அமைச்சர் விஜித ஹேரத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

இலங்கையிலான தனது பதவிக்காலம் மகிழ்ச்சிகரமானதாகவும் வெற்றிகரமானதாகவும் அமைந்ததாகக் குறிப்பிட்ட தூதுவர், இதற்கு வெளிவிவகார அமைச்சு வழங்கிய முழுமையான ஒத்துழைப்பை நினைவுகூர்ந்தார்.

மேலும், தனது பதவிக்காலத்தில் 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் இரு ஜனநாயகத் தேர்தல்கள் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

45 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

78 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0