உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடிப்பு.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
40 பார்வைகள்

மணிப்பூர் மாநிலத்தில் குகி மற்றும் மெய்தி சமூகங்களுக்கிடையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வரும் இன மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இதுவரை ஏற்பட்ட கலவரங்களில் 250க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மாநிலத்தில் நிலவி வந்த அரசியல் குழப்பத்தால் பா.ஜ.க அரசு விலகியதையடுத்து ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தப்பட்டது. பின்னர் கடந்த 04ஆம் திகதி கெம்சந்த் சிங் தலைமையில் புதிய பா.ஜ.க அரசு பதவியேற்றது.இந்தநிலையில், உக்ருல் மாவட்டத்தின் லிட்டன் சரேய்கோங் கிராமத்துக்குள் புகுந்த குழுவொன்று தங்குல் சமூகத்தைச் சேர்ந்த நபரொருவரை தாக்கியதுடன், பல வீடுகளுக்கும் தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதனைத் தொடர்ந்து நேற்று (10) அதிகாலை குறித்த பகுதியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்த போதிலும், இடைஇடையே துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்ந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைதியை நிலைநிறுத்தும் முயற்சியாக, உக்ருல் மாவட்டத்தில் இணைய சேவைகள் 5 நாட்களுக்கு இடைநிறுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.மாநிலத்தில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0