உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

யாழ். மருதனார்மடம் சந்தைக்குள் துப்பாக்கியுடன் உலாவிய நபர் கைது! – போலித் துப்பாக்கி எனப் பொலிஸார் தகவல்!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

யாழ். மருதனார்மடம் பொதுச் சந்தைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வைத்திருந்தது போலித் துப்பாக்கி என்றும், ஆரம்பகட்ட விசாரணைகளின்படி அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:-

இன்று செவ்வாய்க்கிழமை மருதனார்மடம் சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், தலைக்கவசம் மற்றும் கையுறைகளை அணிந்திருந்ததோடு, கையில் ஒரு பையையும் வைத்திருந்தார்.அங்குள்ள வியாபாரி ஒருவரிடம் பச்சை மிளகாய் கொள்வனவு செய்த அந்த நபர், “சந்தைக்குள் வட்டிக்குப் பணம் வழங்குபவர்கள் யார்?” என வினவியுள்ளார். வியாபாரி தனக்குத் தெரியாது எனப் பதிலளித்ததும் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

அந்த நபரின் பையினுள் ரி – 56 ரக துப்பாக்கி போன்ற ஒன்று காணப்பட்டதாலும், இடுப்புப் பகுதியில் கைத்துப்பாக்கி போன்ற ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்ததாலும் அச்சமடைந்த வியாபாரிகள் உடனடியாகச் சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், அங்கிருந்த கண்காணிப்புக் கமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் அடிப்படையில் சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்த பொலிஸார், அவரிடமிருந்த துப்பாக்கியையும் கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கியைச் சோதனை செய்தபோது அது உண்மையான துப்பாக்கி அல்ல என்பதும், போலித் துப்பாக்கியைப் பயன்படுத்தி அவர் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதமையும் கண்டறியப்பட்டது.கைது செய்யப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரியவந்துள்ள நிலையில், சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

45 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

78 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0