உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சைபர் தாக்குதல்களிலிருந்து அரச நிறுவனங்களைப் பாதுகாக்கப் புதிய திட்டம்!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

நாட்டின் முன்னணி அரச நிறுவனங்களை தேசிய சைபர் பாதுகாப்பு நடவடிக்கை நிலையத்துடன் இணைப்பதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.இலங்கை CERT நிறுவனம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவை இணைந்து இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தன. நவீன உலகில் சைபர் பாதுகாப்பு என்பது வெறும் தொழில்நுட்ப விடயம் மட்டுமல்ல, அது தேசிய பாதுகாப்பு, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை ஆகியவற்றில் நேரடியாக தாக்கம் செலுத்தும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்பது இங்கு வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், தகவல் உட்கட்டமைப்பு வசதிகள் இயங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் சைபர் பாதுகாப்பு நடவடிக்கை நிலையம் ஊடாக அரசாங்கத்தின் முக்கிய தகவல்களுக்கான அணுகலை வழங்குவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.இதற்கான கொள்கை ரீதியான முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதுடன், இவ்வருட இறுதிக்குள் ஏனைய அரச நிறுவனங்களையும் சைபர் பாதுகாப்பு நிலையத்துடன் இணைப்பதை இரண்டாம் கட்டமாக முன்னெடுப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதில் முன்னணி அரச நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன், அந்த நிறுவனங்களை தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் மூலம் கணக்காய்வுக்கு உட்படுத்தவும் முன்மொழியப்பட்டது.இதுதவிர, அனைத்து அரச அதிகாரிகளுக்கும் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வூட்ட வேண்டியதன் அவசியமும், அதற்கான பயிற்சித் திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் சைபர் தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறனை அரச நிர்வாகம் மற்றும் சேவை வழங்கலின் அடிப்படை அம்சமாகக் கருத வேண்டும் என்றும்,அரச இணையத்தளங்கள் முடக்கப்படுதல், ரான்சம்வேர் தாக்குதல்கள் மற்றும் தகவல் திருட்டு போன்ற சைபர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அத்தியாவசிய சேவைகள் சீர்குலைவதைத் தடுப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் இந்தப் புதிய முறைமை வாய்ப்பளிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டது.

தேசிய சைபர் பாதுகாப்பு நடவடிக்கை நிலையம் மூலம் அரச நிறுவனங்களுக்கு நிகழ்நேர அச்சுறுத்தல் கண்காணிப்பு, முன் எச்சரிக்கைகள் மற்றும் முறையான ஒருங்கிணைப்புடன் கூடிய பதிலளிப்பு வசதிகள் அளிக்கப்படுவதால், இது வெறும் இணக்கப்பாட்டுப் பயிற்சி மட்டுமல்லாது நிறுவன ரீதியான நம்பகத்தன்மைக்காகச் செய்யப்படும் ஒரு முதலீடாகவும் அறிமுகப்படுத்தப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

45 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

78 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0