உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மட்டக்களப்பில் யானைகள், சட்டவிரோத மணல் கடத்தல்கள்: அபிவிருத்திக்குழு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பேச்சுவார்த்தை..!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
26 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகள் ஏற்படுத்தும் ஆபத்துகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று மாலை வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் நடந்தது.

இக்கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் ஞா.சிறிநேசன், டாக்டர் இ.சிறிநாத், பிரதேசசபைத் தவிசாளர் வி.மதிமேனன் மற்றும் பிரதேச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கடந்த ஆண்டு பிரதேச அபிவிருத்திக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் (168 மில்லியன் ரூபா செலவுகள் – 48 திட்டங்கள்) தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.போரதீவுப்பற்று பிரதேசத்தில் நடைபெறும் சட்டவிரோத மணல் கடத்தல்கள், அம்பாறை-மட்டக்களப்பு எல்லைப்பகுதிகளில் பொலிஸ் காவலரணிகளை அமைக்க வேண்டிய கோரிக்கை முன்வைக்கப்பட்டது.


தொடரும் யானைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அசமந்த போக்கு காரணமாக பிரதேசத்தில் வேலைத்திட்டங்கள் முறையாக நடைபெறாமை குறித்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டது; தேவையான திட்டங்களை விரைவாக முன்னெடுக்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.மேலும், கடந்த கால வீடமைப்பு திட்டங்களில் பூரணப்படுத்தப்படாத வீடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு, பூரணப்படுத்தும் படிப்படியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்பட்டது.கடந்த வெள்ள அனர்த்த காலங்களில் பாதிக்கப்பட்ட வீதிகள் மற்றும் மிக மோசமான நிலைமையுள்ள வீதிகளை திருத்தி, அதிகாரிகளுக்கு பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

45 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

77 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0