எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து புதிய அரசியல் கூட்டணி உருவாகும் – சஞ்ஜீவ எதிரிமான்ன.!
ஸ்ரீலங்காவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து, பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தில் விரைவில் பரந்துபட்ட அரசியல் கூட்டணி உருவாகும் என்று அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.அவர், களுத்துறை பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக கடந்த 75 ஆண்டுகளின் அரசியலை சாபம் என விமர்சித்தது.
ஆனால் இன்று அதே அரசியல் செயலொழுங்கைப் பின்பற்றுகின்றனர். எம் மீதும் ராஜபக்ஷக்கள் மீதும் கடந்த காலங்களில் பல போலிக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றை சட்டம் முன் நிரூபிக்க முடியாமல் அரசு திணறுகிறது” என்று கூறினார்.சாட்சியங்கள் அழிக்கப்பட்டதால் விசாரணைகள் தாமதப்படுவதாகவும், அரசுக்கு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தினார்.
சஞ்சீவ எதிரிமான்ன மேலும் கூறியதாவது: “நாம் கட்சி அடிப்படையில் பலமாக உள்ளோம். அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து விரைவில் புதிய கூட்டணி உருவாக்கி எதிர்வரும் தேசிய தேர்தல்களை எதிர்கொள்வோம். நாட்டை நிர்வகிக்க முடியாவிடின் தேர்தலை நடத்துமாறும் அரசு தயார் செய்ய வேண்டும்.”