உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

யாழில் சுட்டுப் படுகொ*லை செய்யப்பட்ட சிறுவன் பயணித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று மீட்பு!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

சமிக்ஞையை மீறி சென்றதாக கூறி இன்று அதிகாலை யாழ்ப்பாணம் அல்லைப்பட்டி பகுதியில் வைத்து, ஹையேஸ் வாகனம் ஒன்றின் மீது ஊர்காவல்துறை பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் வட்டுக்கோட்டை – சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.இந்நிலையில் குறித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.தேவேளை, இந்த சம்பவத்தின் போது மேலும் இரண்டு இளைஞர்கள் குறித்த வாகனத்தில் இருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.இதேவேளை, உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்று ஆய்வில் துப்பாக்கி தோட்டா நெற்றியில் பட்டு , தலைக்குள் ஊடுவி மூளையை துளைத்து சென்றமையால் மரணம் சம்பவத்துள்ளது என தெரிய வந்துள்ளது.

சிறுவனது உடற்கூற்று பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரி எம். மயூரதன் முன்னிலையில் நடைபெற்றது.அதன் போது துப்பாக்கி சன்னம் சிறுவனின் நெற்றியில் பட்டு ஊடுருவி தலையில் மூளையை தாக்கியமையால் மரணம் சம்பவித்துள்ளது என உடற்கூற்று அறிக்கையில் அறிக்கையிடப்பட்டுள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

45 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

77 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0