இலங்கையில் ஓரினச்சேர்க்கை – சட்ட மா அதிபரின் அதிரடி தீர்ப்பு.!
இலங்கையில் ஓரினச் சேர்க்கையாளர் (LGBTQ) சமூகத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.சுற்றுலா மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு LGBTQ சமூகத்தை இலங்கைக்கு ஊக்குவிக்கும் வகையில் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகார சபையின் தலைவர் வெளியிட்டிருந்த கடிதத்துக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், குறித்த கடிதத்தை வாபஸ் பெறுமாறு சட்ட மா அதிபர் இன்று (10.01.2026) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.மனுவை மேலதிக பரிசீலனைக்காக மார்ச் 4ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.