உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

2019க்கு முன் பெறப்பட்ட சிம் அட்டைகள் மீள்பதிவு – அமைச்சரவை அனுமதி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
17 பார்வைகள்

2019 ஆகஸ்ட் 2ஆம் திகதிக்கு முன்னர் பெறப்பட்ட சிம் அட்டைகளை மீண்டும் பதிவு செய்யவும், சிம் அட்டை விநியோகத்தில் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இது குறித்து அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

தற்போது நடைமுறையில் உள்ள 2019 ஆகஸ்ட் 2ஆம் திகதியிட்ட ஒழுங்குவிதிகள், அதற்குப் பின்னர் பெறப்பட்ட சிம் அட்டைகளுக்கு மட்டுமே பொருந்துகின்றன. எனினும், அதற்கு முன் பதிவு செய்யப்பட்ட பல வாடிக்கையாளர்களின் முழுமையான தகவல்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இல்லாததால், குற்றச்செயல்கள் தொடர்பான சட்டப் புலனாய்வுகளில் துல்லியமான தகவல்களை பெறுவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.


இதனை முன்னிட்டு, 2019 ஆகஸ்ட் 2ஆம் திகதிக்கு முன் பெறப்பட்ட அனைத்து சிம் அட்டைகளின் உரிமையாளர் விவரங்களும் முறையாக மீள்பதிவு செய்யப்படவுள்ளன.மேலும், இதுவரை முறையாக பதிவு செய்யப்படாத 16 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களை வாடிக்கையாளர்களாக பதிவு செய்ய புதிய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

அதேபோல், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு சிம் அட்டைகள் வழங்கும் நடைமுறைகளிலும் புதிய ஒழுங்குகள் அமல்படுத்தப்படவுள்ளன.டிஜிட்டல் பொருளாதார அமைச்சராகிய ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

45 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

77 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0