நிதி மோசடி குற்றச்சாட்டு: கைது செய்யப்பட்ட தொழிலதிபர் உள்ளிட்ட இருவருக்கு நீதிமன்றம் பிணை.!
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சட்டவிரோதமாக சம்பாதித்ததாகக் கூறப்படும் 740 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
தொழிலதிபர் நிமல் சிசிர குமார மற்றும் கெஹெலிய ரம்புக்வெலவின் உறவினரான பண்டார ரம்புக்வெல ஆகியோரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிவான், இருவரையும் தலா 5 மில்லியன் ரூபாய் ரொக்கப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.மேலும், பிணை நிபந்தனைகளாக,
இருவருக்கும் வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது,அவர்களது கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சட்டவிரோதமாக ஈட்டியதாகக் கருதப்படும் 740 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்ய உதவியதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.