உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனின் சித்தி கூறிய தகவல்கள்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
36 பார்வைகள்

அருவிவெட்டுக்கு வேலையாட்களை வேனில் ஏற்றுவதற்காக சென்றபோது, தனது பெறாமகன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த 17 வயது சிறுவனின் சித்தி தெரிவித்துள்ளார்.

இன்று (10) அதிகாலை யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிச் செல்ல முயன்றதாக கருதப்பட்ட வேன் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த வாகனத்தை ஓட்டிச் சென்ற சிறுவன் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக குறித்த சிறுவனின் சித்தி மேலும் தெரிவிக்கையில்,
சிறுவனுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத போதிலும், வாகனம் ஓட்டுவதைத் தொழிலாக செய்து வந்த சிறுவன், பொலிஸாருக்கு கையூட்டுக்களை வழங்கி, சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி சாரதி தொழிலை செய்து வந்ததாக சிறுவனின் சித்தி கூறியுள்ளார்.

அத்துடன் அருவி வெட்டும் தொழிலுக்காக வேலணையில் வேலையாட்களை ஏற்றுவதற்காக சென்றபோது தன்னிடம் பணம் இல்லாததால்தான், பொலிஸார் மறித்தபோதும் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளனர். அதனாலேயே பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

அவருடன் வாகனத்தில் பயணித்த ஏனைய இருவரும் நெருங்கிய உறவினர்களே. குடும்பத்தின் வறுமை காரணமாகவே 17 வயதில் அவர் உழைக்கச் சென்றார். அவரை அநியாயமாக சுட்டுக் கொன்றுவிட்டார்கள் என கண்ணீர் மல்க சிறுவனின் சித்தி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

45 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

77 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0