உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சுமந்திரன் – சிறீதரன் அதிகாரப் போட்டியால் அழிவுப் பாதையில் தமிழரசுக் கட்சி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
14 பார்வைகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியானது இனிவரும் காலங்களில் வடக்கில் மீண்டெழ வாய்ப்பில்லை எனவும், அக் கட்சியின் உட்பூசல்கள் அதனை அழிவுப் பாதையை நோக்கியே இட்டுச் செல்கின்றன எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், வடக்கு மக்கள் தற்போது இனவாத அரசியலை நிராகரித்து தேசிய மக்கள் சக்தியுடன் அணிதிரண்டுள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:-
“இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் சுமந்திரன் – சிறீதரன் இடையிலான அதிகாரப் போட்டி இன்று வீதிக்கு வந்துள்ளது. இவர்களின் தனிப்பட்ட மோதலால் கட்சி பலவீனமடைந்துள்ளது.

இதனைப் புரிந்துகொண்ட வடக்கு மக்கள், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தகுந்த பாடத்தைப் புகட்டியுள்ளார்கள். தமிழரசுக் கட்சியின் வீழ்ச்சி ஏற்கனவே தொடங்கிவிட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியால் நிலைகுலைந்துள்ள சுமந்திரன், தற்போது மீண்டும் இனவாதத்தைக் கையில் எடுத்து அரசியல் செய்ய முயற்சிக்கின்றார். வடக்கின் அபிவிருத்திப் பணிகளை முடக்கும் நோக்குடன் அவர் மக்களைப் போராட்டங்களுக்குத் தூண்டிவிடுகின்றார். ஆனால், வடக்கு மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்லர்.

வடக்கின் மாற்றத்தை மக்கள் விரும்புகின்றார்கள். அதனால்தான் அவர்கள் தேசிய மக்கள் சக்தியின் பின்னால் இன்று அணிதிரண்டு நிற்கின்றார்கள்.

எமது ஜனாதிபதி மற்றும் அரசின் மீது வடக்கு மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் ஒருபோதும் வீணடிக்க மாட்டோம். அவர்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் அனைத்துக்கும் எமது அரசு நிலையான தீர்வுகளை வழங்கியே தீரும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

45 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

76 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0