உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

குடமுருட்டி பாலத்தை நிர்மாணிக்க வலியுறுத்திய ரவிகரன் எம்.பி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
29 பார்வைகள்

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணி கூழாங்குளம் வீதியில் அமைந்துள்ள குடமுருட்டிப் பாலத்தை நிர்மாணிக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா வடக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 10.02.2026 இன்று இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடமே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இக் கோரிக்கையினை முன்வைத்திருந்தார்.

அதற்கமைய குறித்த பாலம் தொடர்பில் அமைச்சர் விமல் ரத்நாயக்க வீதி அபிவிருத்தித் திணைக்களத்திடம் விளக்கங்கோரியிருந்தார்.

அந்தவகையில் 19 மீற்றர் நீளமான குறித்த குடமுருட்டிப் பாலத்தை அமைப்பதற்கு ஏறத்தாள 80 மில்லியன் ரூபா அளவில் நிதி தேவைப்படுமென வவுனியா மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்கள பிரதம பொறியியலாளர் கே.கௌசிகன் பதில் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் மிகவும் பின்தங்கிய இடத்தில் அமைந்துள்ள இந்தப் பாலம் சீரின்றிக் காணப்படுவதால் அந்தப் பகுதியிலுள்ள மக்கள் பலத்த போக்குவரத்து நெருக்கடிகளுக்கு உள்ளாவதாகவும், தொடர்ச்சியாக ஒவ்வொரு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் குடமுருட்டி பாலத்தை அமைப்பதற்கு கோரிக்கை முன்வைக்கப்படுகின்ற போதும் அந்தப்பாலத்தை அமைப்பதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

எனவே, குறித்த குடமுருட்டிப் பாலத்தை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் தொடர்ந்தும் வலியுறுத்தினார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது கோரிக்கை தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமென அமைச்சர் விமல் ரத்நாயக்க இதன்போது பதிலளித்தார்.

இதனையடுத்து வடமாகாண பிரதம செயலாளர் திருமதி.தனுஜா முருகேசன் கருத்துத் தெரிவிக்கையில்,
இவ்வாண்டிற்கான மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் குறித்த குடமுருட்டிப் பாலத்தினை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுமெனத் தெரிவித்திருந்தார்.

குறித்த குடமுருட்டிப் பாலத்தினை அமைப்பதற்கு முன்வந்தமைக்காக வடமாகாண பிரதம செயலாளருக்கும், அமைச்சர் விமல் ரத்நாயக்கவிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது நன்றிகளைத் தெரிவித்திருந்தார்.

மேலும் குறித்த பாலத்தின் நிர்மாணம் தொடர்பில் வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளராலும் இதன்போது கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

45 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

76 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0