வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது.!
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஈரான் நாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 45 வயதுடைய ஈரான் நாட்டு பிரஜை ஒருவர் ஆவார்.
சந்தேக நபரான ஈரான் நாட்டு பிரஜை சாஜாவிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 04.24 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேக நபரான ஈரான் நாட்டு பிரஜை கொண்டு வந்த பயணப்பொதிகளில் இருந்து 36,860 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன் மொத்த பெறுமதி 55 இலட்சத்து 29 ஆயிரம் ரூபா என விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.