உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மாகாண சபைத் தேர்தல் தாமதத்துக்கு தமிழ்த் தேசியக் கட்சிகளும் காரணம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

“தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தில் அதிகளவு குரல் கொடுப்பதை நான் அவதானிக்கவில்லை. மாகாண சபைத் தேர்தல் தாமதத்துக்கு அந்தக் கட்சிகளும் ஒரு காரணமாகும். எவ்வாறாயினும், அரசு மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.” – இவ்வாறு முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் தாமதமடைந்து வருகின்றமை தொடர்பாக ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த அரசுக்குத் தற்போது மக்கள் ஆதரவு தொடர்பான புரிதல் கிடைத்துவிட்டது. அதனால்தான் அரச தரப்பினர் மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருக்கின்றார்கள். தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்துப் பேசுகின்ற அரசு, மறுபுறம் மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருக்கின்றது.

மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்துகின்ற தேர்தலை நடத்தாத அரசு, வடக்குக்குச் சென்று பெரும்பான்மை மக்களை விமர்சிக்கின்றது. மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பதை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.” – என்றார்.

மேலும் மாகாண சபைத் தேர்தல் குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகள் அதிகளவு குரல் கொடுப்பதில்லை என்றும் விஜயதாஸ ராஜபக்ஷ தமது விசனத்தை வெளிப்படுத்தினார்.

எனினும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன், சாணக்கியன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றார்களே என்று வினவியபோது, அவர் பதிலளிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் மாகாண சபைத் தேர்தல் விடயத்தில் அதிகளவு குரல் கொடுப்பதை நான் அவதானிக்கவில்லை. 2017ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் முறைமையை மாற்றியமைத்து, தேர்தல் தாமதமடைவதற்கு இந்தத் தமிழ்த் தேசியக் கட்சிகள் அன்று முழுமையான ஆதரவை வழங்கியதை நான் இங்கு சுட்டிக்காட்டுகின்றேன். தேர்தல் தாமதத்துக்கு அந்தக் கட்சிகளும் ஒரு காரணமாகும். எவ்வாறாயினும் இந்த அரசு மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

45 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

76 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0