உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

எப்ஸ்டீன் ஆவண விவகாரம் : பிரித்தானிய ஆளும் கட்சிக்குள் பிளவு!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
39 பார்வைகள்

பிரித்தானியாவில் நிலவி வரும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவிகளிலிருந்து விலக வேண்டும் என்று ஸ்கொட்லாந்து தொழிற் கட்சியின் தலைவர் அனஸ் சர்வார் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.இது அந்நாட்டின் ஆளும் கட்சிக்குள் பெரும் பிளவை வெளிப்படுத்தியுள்ளது.டவுனிங் ஸ்ட்ரீட் (பிரதமர் அலுவலகம்) தலைமையில் மாற்றம் ஏற்படுவது அவசியம் என்று வலியுறுத்தியுள்ள அனஸ் சர்வார், ஸ்கொட்லாந்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டே இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘இந்த முடிவை எடுப்பது எனக்கு எளிதானதல்ல, இது மிகுந்த மன வேதனையைத் தருகிறது. இருப்பினும், எனது வாக்காளர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமையே முதன்மையானது’ என்று அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.பிரித்தானியத் தலைமையின் தோல்விகள் ஸ்கொட்லாந்தின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்றும், தற்போதைய தலைமை வெற்றியை நோக்கிய பயணத்திற்குத் தடையாக இருப்பதாகவும் சர்வார் குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்டார்மர் ஒரு நல்ல மனிதர் என்பதையும், பொதுச் சேவையில் அர்ப்பணிப்புடன் செயல்படுபவர் என்பதையும் ஒப்புக்கொண்ட சர்வார், ஆனால் தற்போதைய சூழலில் தலைமை மாற்றம் தவிர்க்க முடியாதது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

உலகையே உலுக்கிய எப்ஸ்டீன் ஆவணங்களில், லேபர் கட்சியைச் சேர்ந்த பீற்றர் மாண்டல்சனின் பெயர் இடம்பெற்றுள்ளமை இந்த விவகாரத்தை மேலும் சூடாக்கியுள்ளது. மாண்டல்சனை அமெரிக்காவுக்கான பிரித்தானியத் தூதராக ஸ்டார்மர் நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எப்ஸ்டீனிடம் பிரித்தானிய அரசு தொடர்பான இரகசியத் தகவல்களை மாண்டல்சன் மின்னஞ்சல்கள் ஊடாகப் பகிர்ந்து கொண்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள், ஸ்டார்மர் அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0