இந்திய சந்தையில் அறிமுகமாகிய சாம்சங் கேலக்சி F70e ஸ்மார்ட்போன்.!
தென்கொரிய நிறுவனம் சாம்சங், உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு, வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய மாடல்கள் வெளியிடுவது இந்த நிறுவனம் வழக்கம்.
அதில் பிரபலமான கேலக்சி சீரிஸ் போன்கள் உலகளவில் விரும்பப்படுகின்றன.
இதன் ‘F’ வரிசையில் புதிய மாடலாக கேலக்சி F70e ஸ்மார்ட்போன் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகியுள்ளது.
பட்ஜெட் விலையில் நல்ல தேர்வான ஸ்மார்ட்போன் தேடும் பயனர்களை கருத்தில் கொண்டு இந்த மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இது சர்வதேச சந்தையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.