உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ரில்வினுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும்; மாகாண சபைத் தேர்தல் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

“மாகாண சபைத் தேர்தலை அநுர அரசு நடத்தும் என எதிர்பார்க்கின்றோம். அதற்கான அழுத்தத்தை ரில்வின் சில்வா உள்ளிட்டவர்களுக்கு இந்தியா கொடுக்கும் என நம்புகின்றோம்.” – இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அநுர அரச தரப்பினர் பின்வாங்கி வருகின்றமை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“மாகாண சபைத் தேர்தலை இந்த வருடம் நடத்துவதாகவே அநுர அரசு தெரிவித்திருந்தது. அத்துடன் வரவு – செலவுத் திட்டத்திலும் அதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அதனால் மாகாண சபைத் தேர்தலை அரசு நடத்தும் என்ற நம்பிக்கையிலேயே நாங்கள் இருக்கின்றோம்.

எனினும், டித்வா புயல் அனர்த்தத்துடன் தற்போதைய நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அரசின் முயற்சி குறைந்துள்ளதாகவே தெரிகின்றது. ஆனால் தற்போது மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா உள்ளிட்ட சிலர் இந்தியாவுக்குச் சென்றிருக்கின்றனர். மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியா ரில்வின் சில்வாவுக்கு ஓரளவு அழுத்தம் கொடுக்கும் என நினைக்கின்றோம். அதனால் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் நாட்டின் உண்மைத்தன்மையை மக்களுக்குக் காட்ட முடியுமாகும்.

மேலும் மாகாண சபைத் தேர்தல் இடம்பெறுமாக இருந்தால், நாங்கள் கூட்டணி அமைத்தே போட்டியிடுவோம். எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு பாலமாகவே இருக்கின்றது. அதனால் கூட்டணி அமைப்பது தொடர்பில் தற்போது நாங்கள் அனைவருடனும் கலந்துரையாடி வருகின்றாேம்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாட எமது கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தலைமையில் குழுவொன்றை ரணில் விக்கிரமசிங்க அமைத்திருக்கின்றார். அதேபோன்று ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாட என்னை நியமித்திருக்கின்றார். அதனால் நாங்கள் அனைத்து கட்சிகளுடன் கலந்துரையாடி வருகின்றோம். இறுதியில் சிறந்ததொரு எதிர்க்கட்சியை அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது.

அத்துடன் கூட்டணி அமைக்கும் விடயத்தில். எதிர்கால அரசியல் நடவடிக்கைகளைக் கருத்தில்கொண்டு நாங்கள் முதலாவதாக இணைந்து செயற்பட முயற்சிப்பது ஐக்கிய மக்கள் சக்தியுடனாகும். அதனைத் தொடர்ந்து ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட நாங்கள் தயாராக இருக்கின்றாேம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

45 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

76 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0