உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பழிவாங்கல் அரசியலை முன்னெடுக்கின்றது அரசு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
18 பார்வைகள்

“தேசிய மக்கள் சக்தி அரசு சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் பழிவாங்குகின்றது. குறிப்பாக மகா சங்கத்தினரை இலக்கு வைத்து திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளை இந்த அரசு முன்னெடுத்து வருகின்றது.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டியுள்ளார்.

விசேட அறிக்கையொன்றை நேற்று வெளியிட்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-
“அரசமைப்பின் படி பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளித்து அதைப் பாதுகாத்து போஷிப்பது அரசின் கடமையாகும்.

அதேபோல் ஏனைய மதங்களையும் கலாச்சாரங்களையும் மதிக்க வேண்டும். ஆனால், அரசு நாட்டை ஒரு மதச்சார்பற்ற நாடாக மாற்ற முயற்சிக்கின்றது.

மதகுருமார்களைப் பழிவாங்குவதை உடனடியாக நிறுத்தி, அனைத்து மதத் தலைவர்களுக்கும் உரிய கௌரவத்தை வழங்க வேண்டும்.

விவசாயிகள் அறுவடை செய்துள்ள போதிலும், அவற்றுக்கு நியாயமான விலையை வழங்கவோ அல்லது அவற்றை முறையாகக் கொள்வனவு செய்யவோ அரசு தவறிவிட்டது.

நெல் களஞ்சியசாலைகள் பூட்டப்பட்டிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. மேலும், விவசாயம் முடிவடைந்தும் இன்னும் உர மானியம் விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை.

காலி – பூஸா இராணுவ முகாமிலுள்ள 180 மாற்றுத்திறனாளி இராணுவத்தினரை எதிர்வரும் 16 ஆம் திகதிக்குள் பனாகொட பகுதிக்கு மாற்றுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இது அவர்களை அவமதிக்கும் செயல்.

சீனா இலவசமாக வழங்கிய பாடசாலை சீருடைகளைக் கூட மாணவர்களுக்கு முறையாக விநியோகிக்க இந்த அரசுக்கு இயலவில்லை.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

45 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

76 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0