உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வட்டிப் பணத் தகராறில் இளைஞன் கொ*லை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
18 பார்வைகள்

அம்பாந்தோட்டை மாவட்டம், பெலியத்தை பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை இளைஞன் ஒருவர் கழுத்தறுத்துக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் கட்டுவனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

வட்டிக்குப் பணம் கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட நீண்டகால முரண்பாடு மற்றும் வாய்த்தர்க்கமே இந்தப் படுகொலைக்குக் காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்று மாலை ஏற்பட்ட மோதலின் போது, சந்தேகநபர்கள் மேற்படி இளைஞனின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கொலையுடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளனர். அவர்களைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் விசேட விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

45 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

76 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0