உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மேற்குக் கரையில் அதிகார விரிவாக்கம்: இஸ்ரேல் முடிவுக்கு பலஸ்தீன் எதிர்ப்பு.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
45 பார்வைகள்

மேற்குக் கரை பகுதியில் தனது அதிகாரங்களை விரிவுபடுத்தும் புதிய நடவடிக்கைகளுக்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இந்த நடவடிக்கைகளின் கீழ், இஸ்ரேலிய குடியேறிகள் பலஸ்தீனிய நிலங்களைப் பெறும் நடைமுறைகள் எளிதாக்கப்படுவதுடன், பலஸ்தீன நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இஸ்ரேலிய அதிகாரிகளின் அதிகாரங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இஸ்ரேலின் இந்தத் தீர்மானம் ஆபத்தானது என பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தலையீடு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.இதேவேளை, ஜோர்டான் வெளியுறவு அமைச்சகம் இஸ்ரேலின் நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ளது.

இது சட்டவிரோத இறையாண்மை நிலைநிறுத்தும் முயற்சி என்றும், குடியேற்றங்களை விரிவுபடுத்தும் செயற்பாடாகும் என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும், மேற்குக் கரையில் செயல்படும் ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்துமாறு பலஸ்தீனியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0