உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 17 வயதுடைய சாரதி உயிரிழப்பு; யாழில் பயங்கரம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
18 பார்வைகள்

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிச் செல்ல முயன்ற சந்தேகத்துக்கிடமான வேன் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வட்டுக்கோட்டையை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை 1.18 மணியளவில், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

சந்தேகத்துக்கிடமான வேன் ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார் சைகை காட்டிய போதிலும், குறித்த வேன் பொலிஸாரின் கட்டளையை மீறி மண்டைதீவு நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, மண்டைதீவு வீதித் தடையை பரிசோதித்துவிட்டு அல்லைப்பிட்டி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஜீப் வண்டிக்கு சம்பவம் தொடர்பான தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பொலிஸார் குறித்த வேனை நிறுத்த முயற்சித்தபோதும், அது தொடர்ந்தும் தப்பிச் செல்ல முயன்றதால், முதலில் வானத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எச்சரிக்கை துப்பாக்கிச் சூட்டையும் பொருட்படுத்தாமல் வேன் தொடர்ந்தும் தப்பிச் சென்றதால், வேனை நிறுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வேனின் சாரதி காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சாரதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

மேலும், குறித்த வேனின் பின்புற இருக்கைகள் கழற்றி அகற்றப்பட்டிருந்ததாகவும், வேனில் இருந்த மேலும் இருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸாரும் யாழ்ப்பாண பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவினரும் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

44 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

85 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

74 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0