உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட கிருமிநாசினிகளுடன் இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
18 பார்வைகள்

கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான கிருமிநாசினிகள் மற்றும் விதைகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் இன்று (09) ஹெம்மாத்தகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வரி செலுத்தப்படாமல் சூட்சுமமான முறையில் கடத்தி வரப்பட்ட இந்தக் கிருமிநாசினிகள் மற்றும் விதைகள், விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக ஹெம்மாத்தகம பகுதியில் உள்ள ஒரு இடத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன. இது குறித்த இரகசியத் தகவல் கற்பிட்டி விமானப்படைத் தளத்தின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்தது.

அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், கேகாலை நாரம்பத்த விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று அதிரடிச் சோதனையை மேற்கொண்டனர். இதன்போது மிகவும் இரகசியமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பாரியளவிலான கிருமிநாசினிப் பொருட்கள் மற்றும் விதைகள் கைப்பற்றப்பட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் ஹெம்மாத்தகம பிரதேசத்தைச் சேர்ந்த 44 மற்றும் 45 வயதுடைய நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹெம்மாத்தகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நாளை மாவனெல்லை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

44 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

85 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

74 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0