வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.!
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் அவர்களது ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இளையதம்பி சிறிநாத், திரு.ஸ்ரீநேசன் ஆகியோரது பங்கேற்புடன் இன்றைய தினம் 09.02.2026 பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது குறித்த பிரதேச செயலக பிரிவில் நிலவும் சுகாதார, கல்வி, ஏனைய துறை சார் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.இக் கூட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், ஏனைய திணைக்களங்கள் சார் உயரதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

