உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

எல்லை தாண்டி வந்த பலாலி பொலிஸார் புன்னாலைக்கட்டுவனில் அட்டகாசம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

எல்லை தாண்டி வந்த பலாலி பொலிஸார், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் – ஈவினை பகுதியில் மக்களுடன் முரண்பட்டதாகவும், இலஞ்சம் பெறுவதற்காகவே இவ்வாறு எல்லை தாண்டி வருவதாகவும், அவர்கள் மது போதையில் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் கருத்து தெரிவிக்கையில்,

நான் எனது வயலுக்கு அருகாமையில் எனது காணியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தேன். இதன்போது எனது காணிக்குள் அத்துமீறி உள்நுழைந்த பலாலி பொலிஸார் நான் மதுபோதையில் நிற்பதாக தெரிவித்து முரண்பட்டதுடன் எனது ஆடையையும் கிழித்து வன்முறையில் ஈடுபட்டனர்.

இதன்போது நான் ஊர் மக்களை துணைக்கு அழைத்தவேளை, அவ்விடத்தில் நின்ற பொலிஸார் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பு மேற்கொண்டு ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அந்த இடத்திற்கு வரவழைத்தனர்.

இதன்போது பொலிஸாரின் ஏனைய பொலிஸாரும் அவ்விடத்திற்கு வந்து அட்டகாசம் செய்த வேளை நாங்கள் அதனை காணொளி பதிவு செய்ய முற்பட்டவேளை எங்களை காணொளி பதிவு செய்ய விடாமல் தடுத்தனர்.

சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சற்று தொலைவில் ஒரு மதுபான நிலையம் உள்ளது. அங்கு மதுபானம் பாவித்து விட்டு வருபவர்களிடம் இலஞ்சம் பெறுவதற்காக பலாலி பொலிஸார் எல்லை தாண்டி வீதியில் வந்து நிற்பது வழமை. இவ்வாறான பின்னணியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது.

இனிமேலும் பலாலி பொலிஸார் இவ்வாறு எல்லை தாண்டி வந்து எமக்கு தொந்தரவு செய்ய கூடாது. இதற்கு உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தகட்டு இலக்கமோ, அல்லது பெயர் பட்டியோ அணிந்திருக்கவில்லை என்பதுடன் மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர் கைபேசி மூலம் தகட்டு இலக்கத்தை மறைத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

44 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

85 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

74 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0