குருநாகலில் கடை உரிமையாளர் கொடூரமாக படுகொ*லை – மூன்று சந்தேகநபர்கள் கைது.!
குருநாகல் மாவட்டம், யக்வில – தம்பாடிய பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை, ஒரு கடையின் உரிமையாளரை இரும்புக் கம்பியால் தாக்கி கொடூரமாக படுகொலை செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது.42 வயதுடைய இந்த உரிமையாளர் ஒரு பிள்ளையின் தந்தையாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரின் மனைவி வேலை நிமித்தம் வெளிநாட்டில் சென்றுள்ளார்.
பொலிஸார், முன்னொரு விவகாரம் காரணமாக இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வயது 40, 45 மற்றும் 46 ஆகும்.
சந்தேகநபர்களில் ஒருவர் முன்னாள் இராணுவச் சிப்பாய் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.