உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கு தயார்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
18 பார்வைகள்

“அரசமைப்பு பேரவை விவகாரம் தொடர்பில் எனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவதற்குத் தயார்.” – என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து சிறீதரன் எம்.பி. விலக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவி நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே சிறீதரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

“அரசமைப்பு பேரவையில் இராணுவத்துக்கு ஆதரவாக எட்டு தடவைகள் சிறீதரன் வாக்களித்தார் எனப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது.

அதாவது நான் எட்டு தடவைகள் இராணுவத்தைத் தெரிவு செய்துவிட்டேன் என்ற விம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது.

அரசமைப்பு பேரவையில் நடக்கும் விடயங்களை ஊடகங்கள் முன் பகிரங்கப்படுத்த முடியாது. எனவேதான் என்னை விசாரணை செய்த சுயாதீன ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு கோரியுள்ளேன்.

வடக்கு, கிழக்கிலுள்ள மதத் தலைவர்கள், சிவில் அமைப்பினர் என்னை விசாரிக்கட்டும்.

சிறீதரன் தமிழ் இனத்துக்கு எதிராகச் செயற்பட்டார், இராணுவத்துக்குச் சார்பாகச் செயற்பட்டார் என்பதை உரிய ஆவணங்கள் சகிதம் நிரூபித்தால் அரசியல் இருந்தே நான் ஒதுங்கி விடுகின்றேன்.

அரசியலில் இருந்து என்னை ஓரங்கட்டுவதற்கு உளவியல் போர் முன்னெடுக்கப்படுகின்றது. கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தலில் தோற்றவர்கள் இதனைச் செய்கின்றனர்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

44 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

85 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

74 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0