உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கிவுல் ஓயா திட்டம் மூலம் குடியேற்றங்கள் இல்லை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

கிவுல் ஓயா திட்டத்தின் மூலம் வெளிமாவட்டங்களில் இருந்து புதிய குடியேற்றங்களைக் கொண்டுவரப்போவதில்லை என்றும், இந்தத் திட்டத்துக்குள் தமிழர்களையும் உள்வாங்குவதே தமது இலக்காக உள்ளது என்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் அரசால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கிவுல் ஓயாத் திட்டம் 2007ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு, 2011ஆம் ஆண்டு முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய அனைவரும் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

துரதிஷ்டவசமாக இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் முறையாகக் காணப்படவில்லை. அதனால் இந்தத் திட்டத்தை முன்நகர்த்த முடியவில்லை.

இந்தத் திட்டம் கொழும்பில் இருந்து திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படுவதால் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு அச்சங்கள் காணப்படுகின்றன.

1983ஆம் ஆண்டிலிருந்து நீர்பாசனத் திட்டங்களைப் பயன்படுத்தி குடியேற்றங்கள் செய்யப்பட்டுள்ளமையால் தமிழ் மக்கள் மத்தியில் அவ்வாறான அச்சம் ஏற்படுவது இயல்பானது. ஆனால் முல்லைத்தீவு மாவட்டத்திலும், வவுனியா மாவட்டத்திலும் நீர்ப்பாசனத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்களில் வாழ்ந்த மக்கள், அங்கு வாழ முடியாது வெளியேறிவிட்டார்கள் என்பதுதான் யாதார்த்தமாகும்.

அவர்களின் வாழ்வாதாரத்துக்கான நீர் வசதிகள் இல்லாமையால் அவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டார்கள். தற்போது கரைதுறைப்பற்று, வவுனியா வடக்கு போன்ற பகுதிகளில் வாழும் தமிழ் மக்களும் விவசாயம் செய்கின்றார்கள்.

அதேபோன்று ஜனகபுர உள்ளிட்ட பகுதிகளில் வாழும் சிங்கள மக்களும் விவசாயம் செய்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொண்டு தமிழ் மக்களையும் உள்ளீர்த்து நாம் கிவுல் ஓயா திட்டத்தை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.

இந்தத் திட்டத்தின் ஊடாக எவ்விதமான குடியேற்றங்களும் செய்யப்படமாட்டாது என்பதை உறுதியாகத் தெரிவிக்கின்றேன்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

44 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

85 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

74 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0