சற்றுமுன் யாழில் இடம்பெற்ற விபத்து; ஒருவர் உயிரிழப்பு.!
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொன்னாலை சந்தியில் இருந்து மாதகல் பக்கம் செல்கின்ற வீதியால் இருவர் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்தனர். இதன்போது அவர்கள் பயணித்த உந்துருளி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நின்ற பனை மரத்துடன் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரது சடலம் தற்போது காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.