உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பாரவூர்தி மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆந்தாதொல பிரதேசத்தில், பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற பாரவூர்தி ஒன்றின் மீது இன்று (09) பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.

அம்பலாங்கொடை திசை நோக்கிப் பயணித்த சந்தேகத்திற்கிடமான பாரவூர்தி ஒன்றினைப் பரிசோதிப்பதற்காக பொலிஸார் நிறுத்துமாறு சைகை காட்டிய போது, அந்த பாரவூர்தி பொலிஸாரின் கட்டளையை மீறி நிறுத்தாமல் முன்னோக்கிச் சென்றுள்ளது.

இதன்போது பொலிஸ் அதிகாரிகள் பாரவூர்தியைப் பின்தொடர்ந்து சென்று நிறுத்த முயற்சித்த வேளை பாரவூர்தி தப்பியோட முயன்றதால் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த பாரவூர்தியைப் பரிசோதித்த போது, அதில் 10 பசுக்களும் 4 எருமை மாடுகளும் இருந்துள்ளதுடன், அவற்றில் ஒரு பசு கழுத்து அறுக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

பாரவூர்தியில் இருந்த இரு சந்தேகநபர்களை 5,200 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் பாரவூர்தியுடன் பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அக்குரஸ்ஸ மற்றும் பேருவளை பிரதேசங்களைச் சேர்ந்த 42 மற்றும் 46 வயதுடையவர்களாவர்.

பாரவூர்தியின் சாரதி மற்றும் மற்றுமொரு சந்தேகநபர் தப்பியோடியுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்கு அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

44 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

85 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

74 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0