இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து; பலர் வைத்தியசாலையில் அனுமதி.!
கொஸ்கம பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை (9) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்தினபுரியிலிருந்து பத்தரமுல்லை நோக்கி மின்சார சபை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கால்வாயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது விபத்தில் சிலர் காயமடைந்து கொஸ்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.