கோர விபத்தில் சிறுவன் உயிரிழப்பு.!
இரத்தினபுரி – உடவலவ – தனமல்வில வீதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பேரியல் சந்திப் பகுதியிலிருந்து தனமல்வில நோக்கி அதிவேகமாகச் சென்ற பாரவூர்தி ஒன்று, வீதியோரமாக நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன் மீது மோதியுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் உடனடியாக உடவலவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் பாரவூர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
உடவலவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.