உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

அடுத்தடுத்து இலங்கைக்கு வரவுள்ள சர்வதேச நிதியங்களின் உயர்மட்டக் குழுவினர்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
18 பார்வைகள்

சர்வதேச நிதியங்களின் உயர்மட்டக் குழுவினர் அடுத்தடுத்து இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா எதிர்வரும் 17 ஆம் திகதி இலங்கை வருகின்றார்.

அவர் 18 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின்போது விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் 5 மற்றும் 6 ஆவது மதிப்பாய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உலக வங்கிப் பிரதிநிதிகள் அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளனர்.

2022 – 2023 பொருளாதார நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்ட நெடுஞ்சாலைகள், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களை மீண்டும் தொடங்கும் வகையில் இந்த விஜயம் அமைகின்றது.

குறித்த திட்டங்களை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முழுமையாக நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயர் மற்றும் இலங்கைக்கான பணிப்பாளர் டேவிட் சிஸ்லென் ஆகியோர் ஏற்கனவே திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவுடன் இது குறித்து ஆலோசித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

43 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

84 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

73 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

33 0 0