உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சனே தகைச்சி: ஜப்பானின் முதல் பெண் பிரதமர்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
53 பார்வைகள்

ஜப்பானின் பிரதமராக சனே தகைச்சி கடந்த ஒக்டோபர் மாதம் பதவி ஏற்றார். பதவி ஏற்றதும் அவருக்கு மக்களிடையே 70 சதவீதத்துக்கும் அதிகமான ஆதரவு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தில் அவரது கூட்டணிக்கு குறைந்த அளவிலான பெரும்பான்மை மட்டுமே இருந்த நிலையில், தனது பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை தடையின்றி செயல்படுத்தவும், அரசியல் செல்வாக்கை வலுப்படுத்தவும் பொதுத் தேர்தலை நடத்தும் முடிவை அவர் எடுத்தார்.

வரவு–செலவுத் திட்டம் தாக்கல் செய்ய வேண்டிய காலப்பகுதியில் தேர்தல் அறிவிப்பது நாட்டின் நிர்வாகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதற்கு பதிலளித்த பிரதமர், புதிய அரசு அமைந்ததும் உடனடியாக வரவு–செலவுத் திட்டம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.


இதனைத் தொடர்ந்து ஜப்பானிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், அதற்கான உத்தரவை பிரதமர் பிறப்பித்தார். அதன் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் சுதந்திர ஜனநாயகக் கட்சி 465 இடங்களில் 352 இடங்களை கைப்பற்றி தெளிவான பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.இந்த வெற்றியின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜப்பானின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை சனே தகைச்சி பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0