கியூபாவில் ரிக்டர் 5.5 அளவிலான நிலநடுக்கம் பதிவு.!
கியூபாவில் கடுமையான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் ஆரம்பத்தில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பின்னர் 5.5 ஆக உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 15 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குறைந்த ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கங்கள் மேலதிக அதிர்வுகள் மற்றும் பாதிப்புகளை உருவாக்கும் சாத்தியம் உள்ளதாக ஐரோப்பிய – மத்திய தரைக்கடல் நிலஅதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதற்கு முன்பு கடந்த வெள்ளிக்கிழமை திபெத் மற்றும் மியான்மர் நாடுகளிலும் முறையே 4.4 மற்றும் 4.9 அளவிலான நிலஅதிர்வுகள் பதிவாகியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.