உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்காவின் மிரட்டல் மொழிகளுக்கு அடி பணியப் போவதில்லை– ஈரான் தெரிவிப்பு.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
38 பார்வைகள்

அமெரிக்கா தனது நாட்டை மரியாதையுடன் அணுக வேண்டும் என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியான் வலியுறுத்தியுள்ளார்.ஈரான் மக்கள் மரியாதைக்கு மரியாதையுடன் பதிலளிப்பார்கள். ஆனால் மிரட்டல் மொழியை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணு பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஓமனில் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் சமூக வலைத்தளமான ‘எக்ஸ்’ (X) தளத்தில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.ணு ஆயுத பரவாமை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட உரிமைகளின் அடிப்படையில்தான் எங்கள் அணு நிலைப்பாடு அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

ஓமனில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தையை அவர் “ஒரு முன்னேற்றமான படி” என வர்ணித்ததுடன், பேச்சுவார்த்தைக்கு தனது அரசு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.ஓமனில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தையை அவர் “ஒரு முன்னேற்றமான படி” என வர்ணித்ததுடன், பேச்சுவார்த்தைக்கு தனது அரசு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 1979 இல் அமெரிக்க ஆதரவு பெற்ற ஷா முகம்மது ரேசா பஹ்லவியை பதவியில் இருந்து அகற்றிய புரட்சியிலிருந்து ஈரான் தனது சுயாதீனத்தையே முன்னிறுத்தி வருகிறது என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அறாக்சி தெரிவித்துள்ளார்.எங்களுக்கு என்ன இருக்க வேண்டும், என்ன இருக்கக் கூடாது என்று யாருக்கும் கூறும் உரிமை இல்லை. சிவில் பயன்பாட்டிற்கான யூரேனியம் செறிவூட்டலை எங்களால் கைவிட முடியாது,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா மற்றும் ரஷ்யாவுக்கும் பேச்சுவார்த்தை விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறாக்சி குறிப்பிட்டுள்ளார். ஈரானை தாக்கினால் முழு பிராந்தியமும் போரில் சிக்கிக் கொள்ளும் என ஈரானின் உயர் ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் அப்துல்ரஹீம் மூசாவி, எச்சரித்துள்ளார்.பிராந்தியப் போரை விரும்பவில்லை. ஆனால் அமெரிக்காவுடன் நீண்டகாலப் போரை நடத்தத் தேவையான தயாரிப்பும் சக்தியும் எங்களிடம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0