உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சிறப்பு மனித இனத் திட்டம்: எப்ஸ்டீன் தொடர்பான அதிர்ச்சி ஆவணங்கள் வெளியீடு.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
39 பார்வைகள்

அமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய பின்னர் உயிரிழந்த ஜெப்ரி எப்ஸ்டீன், தனது விந்தணுக்களின் மூலம் ஒரு சிறப்பு மனித இனத்தை உருவாக்கத் திட்டமிட்டிருந்தார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த விவகாரம் குறித்து 2018ஆம் ஆண்டு காலப்பகுதியில் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. தற்போது அமெரிக்க நீதித்துறையால் எப்ஸ்டீன் தொடர்பான இலட்சக்கணக்கான ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டத்தின் பின்னணியும் வெளிப்பட்டுள்ளது.

அதன்படி, எப்ஸ்டீன் பல பெண்களை கருத்தரிக்கச் செய்து, மரபணு தொழில்நுட்பத்தின் மூலம் கர்ப்பகாலத்திலேயே பிறக்கும் குழந்தைகளுக்கு அதிகப்படியான அறிவாற்றலும் திறன்களும் வழங்கி, தனித்துவமான மனித இனத்தை உருவாக்க விரும்பியிருந்ததாகக் கூறப்படுகிறது.தனது திட்டத்திற்கு ஆதரவும் அங்கீகாரமும் பெறும் நோக்கில், பல முன்னணி அறிவியலாளர்களை தனது தனியார் தீவுக்கு அழைத்து விருந்தளித்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஹார்வர்டு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல முன்னணி கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவியும் வழங்கியிருந்தார் என ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை, தனது தலை மற்றும் இனப்பெருக்க உறுப்புகளை உறைநிலையில் பாதுகாத்து வைத்து, எதிர்காலத்தில் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் தன்னை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கிருந்ததாகவும் வெளிவந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0