உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

அரசு நிர்ணய விலையில் இன்னும் நெல் கொள்வனவு செய்யவில்லை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

அரசாங்கம் நிர்ணய விலையில் இன்னும் நெல் கொள்வனவு செய்யவில்லை, இது விவசாயிகளுக்கு செய்யும் பாரிய அநியாயமாகுமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாம் பிரிவின் கீழும், அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் இரண்டாம் பிரிவின் கீழும் விசேட தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுகின்ற விவாதத்திலே கடந்த 06.02.2025 கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
எங்களுடைய பிரதேசத்திலே இப்போது 65 வீதத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் அறுவடை செய்யப்பட்டு முடிந்துவிட்டது.

ஆனால் இந்த அரசாங்கத்தின் நெல் சந்தைப்படுத்தும் சபை விலை நிர்ணயத்தை செய்து இன்று வரை எங்களுடைய மாவட்டத்திலே நிர்ணயித்த விலைக்கு நெல்லை கொள்வனவு செய்யவில்லை. அரசின் ஆகக் குறைந்த கொள்வனவு விலை 120 ரூபா. ஆனால் எங்களுடைய மாவட்டத்தில் 80 ரூபாய்க்கு கொள்வனவு செய்கிறார்கள். இது ஒரு பாரிய அநியாயம். ஒரு ஏக்கருக்கு ஒரு விவசாயி கிட்டத்தட்ட 30,000 ரூபாவை இந்த கொள்வனவினூடாக இழக்கின்றார்கள்.

இந்த அனர்த்தத்தாலே அவர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இன்று நான் நெல் சந்தைப்படுத்தல் சபை தலைவரோடு பேசியபோது அவர் கூறினார் அடுத்த திங்கட்கிழமையில் இருந்து கொள்வனவு செய்ய இருப்பதாக சொன்னார். 70 வீதம், 75 வீதமான விவசாய நடவடிக்கைகள் நிறைவுபெற்ற பின்னர் இனி யாரிடம் கொள்வனவு செய்ய போகின்றீர்கள். இதுதான் கடந்த வருடமும் நடந்தது.

ஆகவே, தயவு செய்து இந்த நெல் கொள்வனவை இப்போதாவது, மிகுதியாக இருக்கின்ற 30 வீதமான விவசாயிகளாவது பயனடையக்கூடிய வகையில் நீங்கள் செய்ய வேண்டும். அடுத்த வருடத்திலாவது எங்களுடைய பிரதேசத்தில் அறுவடை நடைபெறுகின்றபோது அந்த நெல்லை கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

42 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

83 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

73 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

33 0 0