உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வர்த்தமானி கூட சரியாக வெளியிட முடியாத அரசு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

தற்போதைய அரசால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் வர்த்தமானி ஒன்றைக் கூட அச்சிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சைக்காக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில், 2025 ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களே தகுதியுடையவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்தத் தீர்மானத்தினால், அதற்குப் பின்னர் பட்டப்படிப்பை முடித்த பெருமளவான இளைஞர், யுவதிகளுக்குப் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆசிரியர் சேவை வர்த்தமானியில் உள்ள குறைபாடுகள் குறித்து இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ள அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள திகதியை நீடித்து, புதிய வர்த்தமானி அறிவித்தலை அரசு வெளியிட வேண்டும்.

வர்த்தமானிகளை வெளியிடுவதற்கு முன்னர் அரச தொழில் கோரும் பட்டதாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களது கருத்துக்களையும் கேட்டறியுமாறு அரசைக் கேட்டுக்கொள்கின்றேன்.

2025 டிசம்பர் மாதம் வரை பட்டப்படிப்பை நிறைவு செய்த அனைவரும் ஆசிரியர் சேவைப் பரீட்சைக்குத் தோற்றக் கூடிய வகையில் இந்த வர்த்தமானி திருத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அது பட்டதாரிகளுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும்.” – என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

42 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

83 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

73 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

33 0 0