உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பருத்தித்துறை பொலிஸாரின் ஏற்பாட்டில் மர நடுகை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

பருத்தித்துறை பொலிஸாரின் ஏற்பாட்டில் பருத்தித்துறை பிரதேச சபையும் இணைந்து இலங்கையின் சுதந்திரதினத்தை முன்னிட்டு இன்றையநாள் பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் கிராமக்கோடு சந்தியிலிருந்து ஆனைவிழுந்தான் சந்தி வரையும், ஆனைவிழுந்தான் சந்தியிலிருந்து வராத்துப்பளை சந்தி வரையும் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பண்டார தலைமையில் இடம்பெற்ற குறித்த சிரமதான பணியில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொலிஸார், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பூலோலியூர் ரமணன், சபை உப தவிசாளர் காந்தரூபன், சபை செயலாளர், மற்றும் சபை உத்தியோகத்தர்கள் ரமேஸ்வரன் உட்பட பலரும் சிரமதானத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை பருத்தித்துறை பொலிஸாரால் பருத்தித்துறை பிரதேச சபையின் 6 ஆம் வட்டரமான புலோலி, புற்றளை இளைஞர் கழக மைதானத்தில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் மரம் நடுகையும் இடம்பெற்றது.

இதில் பருத்தித்துறை பொலிஸார், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பூலோலியூர் ரமணன், சபை செயலாளர் ரமேஸ்வரன், கழக உறுப்பினர்கள், கிராம மக்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

42 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

83 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

73 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

33 0 0