உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

புத்தர் சிலைகளில் தங்க கலசங்களை திருடிய இருவர் சிக்கினர்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
32 பார்வைகள்

புத்தர் சிலைகளின் நெற்றியில் பதிக்கப்பட்டிருந்த தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களைத் திருடிய குற்றச்சாட்டில், இரண்டு சந்தேகநபர்கள் இன்று (08) நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விகாரைகளில் உள்ள புத்தர் சிலைகளின் நெற்றியில் காணப்படும் கலசங்களையே இவ்விரு சந்தேகநபர்களும் திருடியுள்ளனர்.

அண்மையில் முச்சக்கர வண்டி ஒன்றில் சென்ற இவர்கள், நாவலப்பிட்டி – கெட்டபுலாவ விகாரையில் உள்ள புத்தர் சிலையின் நெற்றியில் இருந்த தங்க முலாம் பூசப்பட்ட கலசத்தைத் திருடியுள்ளனர்.

இக்காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட விசாரணைகளிலேயே நாவலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 45 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட பிலிமதலாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்கள் புத்தர் சிலைகளின் தலைப் பகுதிக்குச் சேதம் விளைவித்துத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் பெருமளவிலான தங்கத்தையும், உருக்கப்பட்ட தங்கக் கட்டிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறிப்பாகக் குருநாகல் மற்றும் பிலிமதலாவ பகுதிகளில் உள்ள தனியார் நகை விற்பனை நிலையங்களில் இவர்கள் திருடிய தங்கத்தை விற்பனை செய்துள்ளமையும், அங்கு அவை உருக்கப்பட்டுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், இக்குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவர்களை நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

42 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

83 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

73 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

33 0 0