உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வல்வெட்டித்துறையில் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை மாநாடு இடம்பெற்று 55 ஆண்டுகள் பூர்த்தி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

1971 ஆம் ஆண்டு மாசி மாதம் 07 ஆம் திகதி தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை மாநாடு யாழ்ப்பாணம் வடமராட்சி – வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது. அன்று வல்வெட்டித்துறை நகரசபை தலைவராக இருந்த ஞானமூர்த்தி ஐயா, சபாரத்தினம்பிள்ளை ஐயா, அரச நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியாக இருந்த வேற்பிள்ளை ஐயா ஆகிய மூவரும் மக்களுடன் இணைந்து தமிழ்க் கட்சிகளினுடைய ஒற்றுமை மாநாட்டைக் கூட்டி இருந்தார்கள்.

1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கம் புதிய அரசியலமைப்பை கொண்டு வர எடுத்த முயற்சியை தொடர்ந்து தமிழ் மக்களிடம் ஒற்றுமை வர வேண்டும் என்ற அடிப்படையிலே இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழர் சுயாட்சிக் கழகம், ஈழத்தமிழர் ஒற்றுமை முன்னணி ஆகிய நான்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டு அன்றைய யாழ்ப்பாண மேயராக இருந்த நாகராஜா தலைமையிலே ஒற்றுமை மாநாடு வல்வெட்டித்துறையில் உள்ள எட்வேர்ட் தங்கவடிவேல் ஐயாவின் வீட்டில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், நூற்றுக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் இலங்கை அரசாங்கத்தை நோக்கி ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வைப்பதென்றும் இந்த நான்கு கட்சிகளும் ஒற்றுமையாக இயங்குவது என்று தீர்மானம் எடுக்கப்பட்டு இது தமிழர்களினுடைய ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி என அறிவிக்கப்பட்ட போது ஆதரவாளர்களோடு இணைந்து வெடி கொழுத்தி பாடசாலை மாணவனாக நானும் மகிழ்ச்சியிலே ஆரவாரப்பட்டதனை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

இப்போது அநுர அரசிலும் ஒரு புதிய அரசியலமைப்பு வந்திருக்கின்ற நிலையில் நாங்கள் அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றுபட்டு கட்சிகளிடையே ஒரு பொது உடன்பாட்டை எட்டி ஒரே கோரிக்கையை நாங்கள் வைப்போமாக இருந்தால் அது மிகவும் பலம் பொருந்தியதாக இருக்கும்.

1976 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 14 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மான பிரகடனத்திலே இது “வல்வெட்டித்துறையிலே கருவாகி திருகோணமலையிலே உருவாகி” என்கிற வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன. குறித்த வரலாற்று சம்பவம் இடம்பெற்று 55 ஆண்டுகள் நேற்றோடு நிறைவடைந்திருக்கின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த தகவல்களை 07.02.2026 அன்று இரவு வல்வெட்டித்துறை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவரான எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் தமிழ்த் தேசியக் கட்சியின் வடமராட்சி – வல்வெட்டித்துறை அமைப்பாளரான விமலதாஸ் கவிச்செல்வன் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினரான செல்வராசா விதுசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

42 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

83 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

73 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

33 0 0